இவ்வருட மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கர்கள் இருவருக்கும் ஜேர்மனியர் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேரந்த ரண்டி ஷெக்மன், யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ரொத்மன், ஜேர்மனியில் பிறந்து தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தோமஸ் சுதோவ் ஆகியோரை 2013 ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மனித உடற்கலங்களில் இரசாயனங்கள் எவ்வாறு சரியான இடத்துக்கு , சரியான நேரத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பது தொடர்பாக வெவ்வேறாக இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
80 லட்சம் சுவீடிஸ் குரொணர் (சுமார் 16.3 கோடி இலங்கை ரூபா) பணப்பரிசு இவர்களுக்கு கிடைத்துள்ளது.
















