கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கீழே வைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: சிரிய ஜனாதிபதி

asathகிளர்ச்­சி­யா­ளர்கள் ஆயு­தங்­களை கீழே வைத்தால் சம­ரச பேச்­சு­வார்த்­தைக்கு தயார் என சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஷாத் தெரி­வித்­துள்ளார்.

சிரி­யாவில் ஜனா­தி­பதி அஷாத்­துக்கு எதி­ராக சுமார் 3 ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் கிளர்ச்­சியில் ஒரு இலட்சம் மக்கள் பலி­யாகி விட்­டனர். அமெ­ரிக்கா கொடுத்த நெருக்­க­டியால் இர­சா­யன ஆயு­தங்­களை ஒப்­ப­டைக்க அஷாத் சம்­மதம் தெரி­வித்தார். ஆனாலும் அங்கு உள்­நாட்டு போர் நீடித்து வரு­கி­றது.

இதற்­கி­டையில் ஜேர்­ம­னியில் பத்­தி­ரி­கைக்கு ஜனா­தி­பதி பஷர் அல் அஷாத் அளித்த சிறப்பு பேட்­டியில் கிளர்ச்­சி­யா­ள­ருக்கு நிபந்­தனை விதித்­துள்ளார். ‘சிரியா பிரச்­சி­னையில் தீர்வு ஏற்­பட வழி இருக்­கி­றது.
கிளர்ச்­சி­யா­ளர்கள் முதலில் ஆயு­தங்­களை கீழே போட்டால் சம­சர பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக இருக்­கிறேன்’ என தெரி­வித்­துள்ளார்.

அடுத்த ஆண்டு நடை­பெறும் ஜனா­தி­பதி தேர்­தலில் மீண்டும் போட்­டி­யி­டு­வீர்­களா? என்ற கேள்­விக்கு அவர், ‘இன்னும் முடிவு செய்யவில்லை, அது பரிசீலனையில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply