சல்மான் குர்ஷித் கோரிக்கையைத் தட்டிக்கழித்தாரா மகிந்த?

salman13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நேற்றைய தினம் சிறிலங்கா அதிபரி மகிந்த ராஜபக்ச.எடுத்துக் கூறியுள்ளார்.

நேற்றுக்காலை அலரி மாளிகையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை, சல்மான் குர்ஷித் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த தளம் என்றும், அதுவே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.

இதன்மூலம், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு தனக்கு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு விவகாரங்கள், வர்த்தக உறவுகள், மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சிறிலங்கா அதிபரும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply