ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்தவாறு எதிர்க்கட்சிபோல் செயற்படுவதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்க முடியும்.
கசிப்பு வியாபாரத்தை சட்ட ரீதியாக்கி அதில் வருமானம் தேட முடியும் என பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் தெரிவித்துள்ளார்.
திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தினால் கசிப்பை சட்டரீதியாக்க அரசாங்கம் தயாராகிவிட்டது. கிராமத்துக்கு கசிப்பு அனுமதிப் பத்திரம் வழங்கும் திட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக 14 ஆயிரம் கசிப்பு விற்பனை நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தையும் சட்ட ரீதியாக பதிவு செய்ய சரத் அமுனுகம முயற்சிக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















