தங்க கட்டிகளில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துகள்

Tamil-goldதேனூரில் கண்டெடுக் கப்பட்ட தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது, கண்டறியப்பட்டது.

மதுரை மாவட்டம், தேனூரில் 2009ல், செல்வம் என்பவரின் வீடு அருகில் இருந்த மரம் காற்றில் முறிந்து விழுந்தது.

அதை அகற்றுகையில் மண் கலயத்திற்குள் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.

கலயத்திற்குள் 661 கிராம் எடையுள்ள ஏழு தங்கக்கட்டிகள் 21 உத்தி ராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டொலர் இருந்தன.

அவை மதுரை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

கலெக்டர் அறிவுறுத்தலின் படி தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த அரசு மியூசிய காப்பாட்சியர் கூறுகையில்,

´ஏழு தங்கக் கட்டிகளிலும் தமிழ் பிராமி எழுத்து வடிவில் ´போகுல் குன்றக் கோதை´ என எழுதப்பட்டிருந்தது.

இவை 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து.

தற்போது போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது மலையைக் குறிக்கும்´ என்றார்.

Tags: , , , ,

Leave a Reply