மிஸ் யுனிவர்ஸ் அழகி அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கல்போ தாஜ்மஹாலில் சட்ட விரோதமாக சப்பாத்து ஒன்றின் விளம்பர காட்சிகளில் நடித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இந்த நினைவிடத்தில் எவ்வித விளம்பர நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ சப்பாத்து ஒன்றின் விளம்பர படத்திற்கான காட்சிகளில் நடித்தார் என்பது தெரியவந்து உள்ளது.
இதை தாஜ்மஹாலை நிர்வகிக்கும் தொல்பொருள் ஆய்வுத் துறையும் கவனிக்கவில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தாஜ்மஹாலில் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகி ஒலிவியா மீது பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
















