சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து வீதியில் வீசிய கொடூரம்

Cremationபாகிஸ்தானில் இஸ்லாமிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் சடலம், அகழ்ந்து எடுக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில், இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த புரோ பீல் என்ற நபர் ஒரு வீதி விபத்தில் உயிரிழந்தார். அவரது சடலத்தை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு குழுவினர் அங்கு வந்து புரோ பீல் சடலத்தை தோண்டி எடுத்து வெளியே வீசினர். இஸ்லாமியர்களின் சுடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது.

சுமார் 8 மணி நேரமாக திறந்த வெளியில் கிடந்த பீலின் சடலத்தை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.

பின்னர் உள்ளூர் நபர் ஒருவர் அவரது நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். பீலின் உடலை மீண்டும் அடக்கம் செய்த அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply