புது வருடத்தில் காதலியை கரம்பிடிக்கிறார் இளவரசர் ஹாரி

prince-hariஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி அடுத்த ஆண்டு அவரது காதலியை திருமணம் செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசர் வில்லியமின் தம்பியான இளவரசர் ஹாரி அடுத்த ஆண்டு அவரது காதலியான கிரசிடா போனாஸை மணம் முடிப்பார் எனத் தெரிகிறது.

29 வயதாகும் இளவரசர் ஹாரி, இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சே ஹெலிகாப்டரில் விமானியாக பணிபுரிகிறார். இவர் கிரசிடா போனாஸ் என்ற 24 வயது பெண்ணை காதலித்து வருகிறார்.

திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து ஹாரி பேசிவந்த நிலையில், தற்போது கிரசிடாவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக அவரது தோழி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு திருமண விழா நடக்கவிருப்பது குறித்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply