சூடு வைத்தும் நெருப்பினால் சுட்டும் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி – அயல் வீட்டுப் பெண் கைது!

arrestசிறுமி ஒருவருக்கு நெருப்பினால் சூடு வைத்தும் சுடு தண்ணீர் ஊற்றியும் கொடுமைப்படுத்திய பெண் ஒருவரை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அப்புத்தளை, தங்கமலை தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இவ்வாறு அவரது அயல் வீட்டுப் பெண் நெருப்பினால் சூடு வைத்தும் கழுத்துப் பகுதியில் சுடுநீர் ஊற்றியும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டில் தந்தையுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அயல் வீட்டுப் பெண் தன் வீட்டிற்கு வந்து தந்தையுடன் இணைந்து தொலைக்காட்சி பார்ப்பதாகவும் இதன்போதே தனக்கு சூடுவைத்ததாகவும் சிறுமி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளதாகவும் தந்தையுடன் சிறுமி தனிமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சூட்டுக்காயங்களுக்குள்ளான சிறுமி அப்புத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: , , ,

Leave a Reply