பொதுநலவாயத்துக்கான நிதியுதவியை நிறுத்த கனடா பரிசீலனை

canada-prime-ministerஇலங்கையில் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் இன்மையால் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என கனடாவின் பிரதமர் பொதுநலவாய நாடுகள் அமையத்துக்கு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்துவது தொடர்பிலும் பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இலங்கையில் இன்னமும் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, இன்னமும் மோசமான சூழலே நிலவுகிறது என்று கனடாவின் பிரதமர் ஸ்ரிபன் ஹார்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாயத்துக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் கனடாவின் நிதியுதவியை நிறுத்துவது தொடர்பிலான பரிசீலனை முடிவு பொதுநலவாய அமையத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் பாரிய தாக்கம் செலுத்தும். இதனிடையே, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கைக்கு சார்பாக இயங்குவதாக கனடா செனட் சபை உறுப்பினரான ஹியூ சேகல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply