குறித்த வழக்கு இன்று கம்பஹா நீதவான் டிக்ரி கே. ஜயதிலக்க முன்னிலையில் இன்று நடைபெற்ற போது அதில் சாட்சியளித்த பொலிஸ் அத்தியட்சகர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவின் நெறிப்படுத்தலின் கீழ் கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு தொடர்பில் வெலிவேரியாவுக்கு தான் இராணுவத்தை அழைக்கவில்லை என்று நீதிமன்றில் தெரிவித்த போது பொலிஸ் அத்தியட்சகர் இராணுவத்தை அழைக்காவிட்டால் இராணுவத்தை அழைத்தது யார் என்பதை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி கோரினார். இதற்கு பதிலளித்த பொலிஸ் அத்தியட்சகர், வெலிவேரிய நிலைமை தொடர்பாக தான் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும். அதனடிப்படையிலேயே பொலிஸ்மா அதிபரே இராணுவத்தை வெலிவேரிய பிரதேசத்திற்கு அழைத்ததாக தனக்கு கிடைத்துள்ள அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















