மாணவனை தாக்கிய வழக்கில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் விளக்கமறியலில்; கடுவலை நீதிமன்றில் தீர்ப்பு

police-lkபல்கலைக்கழக மாணவனை கடத்தி சென்று தாக்கிய வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன விளக்கமறியளில் இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளா.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் நிபுண ராமநாயக்க என்ற மாணவன் கடத்தப்பட்டு தாக்க பட்ட சம்பவம் தொடர்பில் இவர் மீது கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இன்று வழக்கு விசாரனை ஆரம்பமான போது அவரை எதிர்வரும், 24 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இவர் முன்னிலையான சட்டத்தரணி வாஸ் குணவர்த்தனவிற்கு பிணை வழங்குமாறு கோரியிருந்த போதும் பின்னர் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply