கோச்சடையான் மருமகளுக்கு டப்பிங் பேசப்போகிறார் சவீதா. யாரது கோச்சடையான் மருமகள்?
கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் ரஜினி நடிக்கிறார்.
அப்பா கோச்சடையானின் மகனின் காதலியாக நடிக்கிறார் தீபிகா படுகோன். அதாவது கோச்சடையானின் மருமகள். இப்போ கொஞ்சமாக புரிந்திருக்குமே?
தமிழில் நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுப்பது என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதாவைதான் அழைப்பார்கள். அட்டகாசமான குரல். குப்பை படமாக இருந்தாலும், ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க, படம் எனக்குப் பிடிச்சிருக்கு என்பார் இயக்குனர்களிடம்.
அப்புறமென்ன… சவீதா எப்போதும் பிஸிதான். கோச்சடையானில் தீபிகா படுகோனுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவரது கேரக்டருக்கு சவீதாதான் குரல் தந்திருக்கிறார்.
அதேநேரம் கோச்சடையான் – அதாவது அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஷோபனா தனது கேரக்டருக்கு அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
டிசம்பர் 12 கோச்சடையானை வெளியிடும் முனைப்பில் இருக்கின்றனர்.
















