தன்னைப் பிடிக்க வந்த பெரிய வெள்ளை சுறா மீனிடமிருந்து அதிர்ஷ்டவசமான முறையில் மயிரிழையில் கடல் நாய் ஒன்று உயிர் பிழைத்த அரிய காட்சியினை புகைப்படவியலாளர் ஒருவர் முழுமையாக படமெடுத்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின் கேப்டவுண் நகரின் கடற்கரையில் நடந்த இச்சம்பவத்தினை படகில் துரத்திச் சென்று அயர்லாந்தைச் சேர்ந்த 41 வயதான டேவிட் பஷ் ஜென்கின்ஸ் என்ற புகைப்படவியலாளரே தனது கமெராவில் காட்சியாக்கியுள்ளார்.
இது குறித்து டேவிட் கூறுகையில், கடலிலிருந்து கடல் நாய்கள் தீவுக்கு கடல் நாய்கள் திரும்பிச் செல்லும்போதே இத்தாக்குதல் நடைபெற்றது. நீரிலிருந்து முழுமையாக வெளியே பாய்ந்து விரைவாக செயற்படத்தக்க சுறாவிடமிருந்து அதிர்ஷ்டவசமாக அந்த கடல் நாய் தப்பியது.
இதன்போது சுறாவின் பல்லிற்கு ஒரு சில அங்குல இடைவெளியில் அதன் மூக்கில் தன்னை சமநிலைப்படுத்தியே அந்தக் கடல் நாய் தப்பியது எனத் தெரிவித்துள்ளார்.
















