வேறு பெண்ணுடன் கட்டிலில் இருந்த காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலி கைது

kniefதனது காதலன் வேறு ஒரு பெண்ணுடன் கட்டிலில் இருந்ததை கையும்களவுமாக கண்டுபிடித்த காதலி அவரது ஆணுப்பை கத்தியால் வெட்டிய சம்பவமொன்று அண்மையில் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்காவின் கௌடெங் எனுமிடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத காதலி தனது காதலனையும் வேறு ஒரு பெண்ணையும் ஒன்றாக இருப்பதை கண்டு அவர்களை நிர்வாணமாக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பின்னர் கத்தியை எடுத்து காதலின் ஆண்குறியை வெட்டியுள்ளார் எனக் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கௌடெங் பொலிஸார் கூறுகையில், 21 வயதான வயதான பெண்ணொருவரே இவ்வாறு காதலின் ஆணுறுப்பை கத்தியால் வெட்னார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்திலேயே கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் 2500 ரண்ட் (சுமார் 32500 ரூபா) ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதனைக் கட்டத் தவறியமையால் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் பொஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply