ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்களுக்கான வளையக்கூடிய நெகிழ்தன்மையான தொடுதிரையை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக எல்.ஜி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக எல்.ஜி மற்றும் சம்சுங் நிறுவனங்கள் இவ்வகை நெகிழ்தன்மையான போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வளையும் தொழில்நுட்பத்திலான கைத்தொலைபேசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சம்சுங் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வளையும் போன்கள் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகின் முதலாவது வளையும் திரைகொண்ட ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்களை எல்.ஜி. நிறுவனம் முந்திக்கொண்டு வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளது.
தற்போது சங்சுங்கின் நெக்சஸ் எஸ் மற்றும் கலக்ஸி நெக்சஸ் போன்களிலும் சற்றே வளையும் திரை உண்டு. ஆனால் கண்ணாடியால் உருவாக்கப்பட்டவை. இதனை விட எல்.ஜியின் பிளாஸ்டிக் திரைகள அதிக நெகிழ்வு தன்மைனயானவை.
எவ்வாறாயினும் வளையும் உற்பத்திகள் அடுத்த வருடமே நுகர்வோர்களுக்கு கிடைக்கும்.
LG Z எனப் பெயரிடப்பட்டுள்ள 6 அங்குலம் அளவிலான இத்தொடுதிரை 0.44 மி.மி தடிப்பும், 7.2 கிராம் நிறையுமான உடையாமல் வளையும் தன்மைகொண்ட பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட ஓ.எல்.ஈ.டி. தொடு திரையுடன், வளையும் பெட்டரியும் அறிமுகமாகவுள்ளது.
இது தொடாபில் எல்.ஜியின் பிரதம தொழில்நுட்ப அதிகாரியான கலாநிதி டியொக் எயோ கூறுiகில், எல்.ஜி.யின் இந்த அறிமுகமானது ஸ்மார்ட் போன்களின் நெகிழ்தன்யான திரையின் புதியதோர் சகாத்தமாக அமையும். இவை விரைவில் வளர்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளார்.
















