150 வரு­டங்கள் பழை­மை­யான அப்பிள் மரத்தில் குடி­ய­மர்ந்த நபர்: மரத்­தினை வெட்­டாமல் தடுக்க திட்டம்

apple-tree150 வரு­டங்கள் பழை­மை­யான அப்பிள் மரத்­தினை வெட்­டாமல் தடுப்­ப­தற்­காக சுற்­றுச்­சூழல் போராளி ஒருவர் அந்த மரத்தின் மீது குடி­யி­ருப்பை ஏற்­ப­டுத்தி போரா­டு­கிறார்.

இங்­கி­லாந்தின் கிளோ­செஸ்­டர்­ஷெ­யாரைச் சேர்ந்த ரொவன் பரோ என்ற 44 வயது நபரே இவ்­வாறு மரத்­தினை வெட்­டாமல் தடுக்கப் போரா­டு­கிறார்.

கிளோ­செஸ்­டர்­ஷெயார் பகு­தியில் ஆடம்­பர குடி­யி­ருப்பு திட்­ட­மொன்­றினை அமைப்­ப­தற்­காக கட்­டு­மான நிறு­வ­ன­மொன்று இப்­ப­கு­தி­யி­லுள்ள குறித்­த­ள­வான நிலப்­ப­ரப்­பினை வாங்­கி­யுள்­ளது. ஆனால் இத்­திட்­டத்­தி ற்கு எதிரா நக­ர­ச­பைக்கு பல முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

பிரச்­சி­னை­களை முடி­வுக்கு கொண்­டு­வந்து 15 நாட்­க­ளுக்கு முன்­பி­ருந்து கொந்­த­ராத்­துக்­கா­ரர்கள் அவ்­வி­டயத்தில் வேலை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­நி­லை யில் குறித்த நிலப்­ப­ரப்­பி­லுள்ள 150 வரு­டங்கள் பழை­மை­யான அப்பிள் மரத்­தினை வெட்ட வேண்­டி­ ஏற்பட்டுள்­ளது.

இதனை தடுப்­ப­தற்­கான முயற்­சி­லேயே ரொவன் ஈடு­ப­டு­கின்­றார். இவர் மரத்தில் படுக்­கையை அமைத்து அமர் ந்­துள்ளார். இவ­ருக்குத் துணை­யாக 39 வய­தான மெத்­தியூ ஸெல் என்­ப­வரும் இணைந்­துள்ளார். மரத்­தினை பாது க்கும் இவர்­க­ளது திட்­டத்­திற்கு அப்பகு­தி­யி­லுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­களும் ஆத­ரவு தெரி­வித்து ரொவ­னுக்கு உணவு மற்றும் பானங்­களை வழங்­கு­கின்­றனர்.

பொலி­ஸாரின் தலை­யீட்டில் இவர்கள் நேற்­று­முன்­தினம் காலை மரத்­தி­லி­ருந்து இறக்­கப்­பட்­டுள்ளனர். பின்னர் மரம் முக்­கால்­வாசி வெட்­டப்­பட்ட நிலையில் மீண்டும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மரத்தில் ஏறி­யி­ருப்­ப­தாக பொலிஸ் ­பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

குடி­யி­ருப்­பு­க­ளுக்கு நாங்கள் எதிர்ப்பில்லை. அது­போல இயற்­கையும் எமக்கு அவ­சியம். நமது பரம்­ப­ரி­யங்­களில் அப்பிள் மரமும் ஒன்று என பிரதேச வாசிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த அப்பிள் மரத்­தினை புதிதாக அமைக்கும் ஆடம்பரக் குடியிருப்பின் தோட்டதில் இணைத்தால் என்ன என ரொவன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இக்குடியிருப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply