இந்தியாவில் எரிபொருள் விலை கிடுகிடு உயர்வு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் விலையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாறுதலும் ஏற்படாமல் இருந்து வந்தது.

ஆனால் இந்த சமயத்தில் கச்சா எண்ணெய் விலையில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 140 டாலராக உள்ள நிலையில் 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
    
இருப்பினும் கடந்த 22ம் தேதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயரத் தொடங்கியது. அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து 107.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து 97.52 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எற்படவில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!