விக்னேஸ்வரனும் ஹக்கீமும் சர்வதேசத்துடன் இணைந்து நாட்டைப்பிரிக்க முயற்சி; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

wimal-weerawansaபிரபாகரன் – ரணில் ஆகியோர் சர்வதேசத்துடன் இணைந்து நாட்டைப்பிரிக்க முற்பட்டதைப் போன்று இன்று விக்னேஸ்வரன் மற்றும் ஹக்கீம் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் அரசாங்கத்திற்குள்ளிருந்தும், விக்னேஸ்வரன் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தும் பிரிவினை சக்திகளாக செயற்படுகின்றனர்

வடக்கு, கிழக்கில் தனி ஆட்சியமைத்து ஒரே நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதையே ரவூப் ஹக்கீமும் விக்னேஸ்வரனும் முயற்சிக்கின்றனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கையினையே ரவூப் ஹக்கீமும் முன்வைத்துள்ளார். கூட்டமைப்பினர் குறிப்பிட்ட மாகாணசபை அதிகாரங்களையே ஹக்கீமும் கோரியுள்ளமையானது இவ் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கெதிராக செய்யும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது.

இவ் இருவரும் சர்வதேசத்தின் உதவியோடு அரசங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் தனிநாடாக ஒன்றிணைக்க முயற்சித்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே அமையும்.

மேலும் கூட்டமைப்பின் பிரிவினை கோட்பாடானது தமிழர்களின் மனதில் புகுத்தப்பட்டுள்ளதைப் போன்று தற்போது கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் பரவவிடப்பட்டு வருகின்றது. தமது தீவிரவாதக் கொள்கையினை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும் சர்வதேச ஒத்துழைப்புகளுடனும் செய்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply