வடமாகாண அமைச்சர் பதவியேற்பை கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் புறக்கணிப்பு

tnalogo2தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் பதவியேற்பு வைபவத்தை, அதன் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 30 பேரில் எண்மர் இன்று (11) இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர்.

புளட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவர், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த ஐவர் மற்றும் ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலங்கமும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் இந்த பதவியேற்பு வைபவத்தை பறக்கணித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply