இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்கின்றது – ஜாதிக ஹெல உறுமய

JHUஇலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளின் மூலம் இலங்கையில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதனை பாரதூரமான நிலைமையாகக் கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணசபை முதலமைச்சரை சந்தித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது சரியானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய கொடியை பயன்படுத்தியதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியது எனவம் தெரிவித்துள்ளது.

வடக்கு இந்தியாவின் மாநிலமல்ல எனவும், இலங்கை தேசியக் கொடிக்கு உரிய மரியாதை அளிக்காது, இந்திய தேசியக் கொடிக்கு கூடுதல் மரியாதை அளிக்கப்பட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply