இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்

lk-armyகிளி­நொச்சி மாவட்­டத்தில் தினமும் இரவு வேளை­களில் ஆயு­தங்­க­ளுடன் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் இரா­ணு­வத்­தி­னரால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர்.

வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போது அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் சகல பகு­தி­க­ளிலும் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இந்த நட­வ­டிக்­கைகள் தற்­பொ­ழுதும் இடம்­பெற்று வரு­கின்­றது. அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தி­னரின் ரோந்து நட­வ­டிக்­கை­யினால் இப்­ப­குதி மக்கள் அச்­ச­ம­டைந்த நிலையில் உள்­ளனர்.

கிளி­நொச்­சியில் இரவு வேளை­களில் வீதி­யோ­ரங்­களில் ஆய­தங்­க­ளுடன் மறைந்து நிற்கும் இரா­ணு­வத்­தினர் வீதியில் செல்­வோ­ரிடம் சோத­னை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

பிர­தான வீதி­களில் பொலி­ஸா­ருடன் இணைந்தும் சில இடங்­களில் இரா­ணு­வத்­தினர் தனித்தும் வாக­னங்­களை சோத­னை­யி­டு­வ­துடன் மோட்டார் சைக்­கிளில் பய­ணிப்­போ­ரையும் மறித்து விசா­ரணை செய்­ததன் பின்­னரே செல்ல அனு­ம­திக்­கின்­றனர்.

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடு­களால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்ச­மடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Tags: ,

Leave a Reply