காதில் பொருத்திக் கொண்டு, பற்களால் இயக்கும் மியூசிக் பிளேயர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், மியாமி பீச் பகுதியில் உள்ள, “கிரீன்வேஸ் ஆடியோ´ நிறுவனம், காதில் மட்டும் பொருத்தி, விருப்பமான பாடல்களை கேட்கும் விதமாக, மிகச் சிறிய மியூசிக் பிளேயரை தயாரித்துள்ளது.
ஒரு அங்குலத்திற்கு சற்று அதிகமான, எவர்சில்வரால் தயாரிக்கப்பட்ட இந்தக் கருவியில், பட்டன் அளவுள்ள பேட்டரி, மிகச் சிறிய சர்க்கியூட் போர்டு, மெமரி சிப், புராசசர் மற்றும் டிஜிட்டல் ஒலியில் பாடல்களைக் கேட்பதற்குத் தேவையான சில பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை இயக்க, பட்டன்களோ, குரல் கட்டளையோ தேவையில்லை. இந்த சாதனத்துக்கு, “ஸ்பிளிட்´ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மியூசிக் பிளேயரை, இரு காதுகளிலும் பொருத்தி, பற்களை கடிக்கும் போது, தேவையான பாடல்களை ஒலிபரப்பாகும்.
இந்த மியூசிக் பிளேயரில் உள்ள, “ஆக்சிலரோமீட்டர்´ இசையை கட்டுப்படுத்தும்.
















