2013 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel2013 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நோபல் பரிசுகள் குறித்த விபரங்கள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் செயல்பட்டு வரும் இரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்பிற்கு இந்த உயரிய பரிசு கிடைத்துள்ளது. இந்த அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

தற்போது, சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்கள் குறித்து இந்த அமைப்பினர் தான் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப்சாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு இயக்கத்திற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply