இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களை அறிமுகம் செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்தவில்லை என பர்ஹான் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலயங்களை அறிவிக்குமாறு வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரை நிறுத்துமாறும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியதாகவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
















