ஒற்றுமையைக் குலைக்க யாருக்கும் உரிமையில்லை – சம்பந்தன்

sambanthan-talkதமிழ் மக்கள் எமக்கு ஒற்றுமையாக வாக்களித்திருக்கிறார்கள். அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கு யாருக்கும் உரி மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் தார்.

நேற்றைய பதவியேற்பு நிகழ் வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற் பில் பங்கேற்க வேண்டிய எல் லோரும் பங்குகொள்ள வில்லை. இதைச் சர்ச்சை யாக்க விரும்பவில்லை. இது சர்ச்சையுமில்லை.

எனது நண்பர்களைப் பார்த்துக் கூறிக்கொள்ளவிரும் புகின்றேன். நீங்கள் அவசரமாக ஒரு முடிவை எடுத்திருந்தாலும், எங்களுடைய பயணம் ஒரு கடினமான பயணம், அதில் நாங்கள் பலமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய பலத்தின் அத்தி பாரம் ஒற்றுமையே, மக்கள் ஒற்றுமையாக வாக்களித்திருக்கின்றார்கள். மக்கள் ஒற்றுமையை குலைப்பதற்கு யாருக்கு உரிமையில்லை. அதைப் பாதுகாக்க வேண்டியது எல்லோரதும் கடமை.

நாங்கள் உங்களை வித்தியாசமாக ஒருபோதும் கத மாட்டோம். தாமதமில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துங்கள், விக்னேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துங்கள். தமிழ் மக்களின் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்றார்.

Tags: , ,

Leave a Reply