போரின் பாதிப்பை விடவும் மோசமானது பேரினவாதம்

perinavathamபெளத்தமத பேரினவாதிகளின் நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்பானது, வட, கிழக்கு போரால் ஏற்பட்ட இழப்பையும் விட பாரதூரமானது.

இவ்வாறு மு.காவின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ய­ய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த நாட்டின் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தடுத்துக் கொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது.

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாது தடுத்த பெருமை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச். எம்.அஷ்ரப்பையே சாரும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு மட்டுமே. ஆனால் பெளத்த பேரினவாதத்தால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே 24 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.

பெளத்த பேரினவாதிகளால் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இன்னமும் சுமூக நிலைக்குத் திரும்பவில்லை. என்றார்.

Tags: ,

Leave a Reply