பிஸ்ரலுடன் ஈ.பி.டி.பி. நபர் நேற்றிரவு நகரில் கைது; போதையில் இருந்தபோது பாய்ந்து மடக்கியது ரி.ஐ.டி.

gunசட்டவிரோத ஆயுதத்துடன் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு யாழ். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) இவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பற்றிக் தோழர் என்று அழைக்கப்படும் கரம்பன் கிழக்கு, ஊர் காவற்றுறையைச் சேர்ந்த ஜோசப் பற்றிக் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் இருந்து சட்ட விரோதமான 9 எம்.எம். பிஸ்ரல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது இவர் நிறைபோதையில் பிஸ்ரலுடன்
இருந்தார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. போதையில் ஸ்ரான்லி வீதியில் இருந்த உணவகம் ஒன்றில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் அமைச்சரின் பாதுகாவலர் என்றும் அதனால் தனக்குத் துப்பாக்கி தரப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படுகையில் அவர் தெரிவித்திருக்கிறார் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என்றும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: , , , ,

Leave a Reply