போராட்டங்களை நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற தகவல்கள் போலியானவை எனத் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமாவு நடைபெறும் காலப்பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பாதாகை இடுதல், கறுப்பு கொடியிடல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















