திருமணத்திற்கு முன்பே காதலனுடன் சேர்ந்து வாழும் மீரா ஜாஸ்மின்

தமிழில் ரன், சண்ட கோழி, ஆய்த எழுத்து, மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின்.

meeraஇவருக்கும் மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை பேச்சுவார்த்தை சென்றது. ஆனால் ராஜேஷின் குடும்பத்தினர் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.

தொடர்ந்து மீரா படங்களில் நடித்து வந்தார். ராஜேஷுடனான உறவு பற்றி கேட்கும்போதெல்லாம் அந்த கேள்வியை தவிர்த்து வந்தார்.

ஆனால் காதல் விவகாரத்துக்கு முன்பு அவருக்கு திரையுலகில் இருந்த வரவேற்பு பின்னர் குறைந்தது. ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இதற்கிடையில் மல்லுவுட்டில் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்கவில்லை என்பதற்காக சில பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

அவரை மலையாள படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று மல்லுவுட் திரைப்பட சங்கம் தடை விதித்தது.

பிரச்சினைகள் ஓய்ந்த நிலையில் தற்போது மீராவின் காதல் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ராஜேஷுடனான கேள்விகளுக்கு அவர் சூசகமாக பதில் அளிக்கிறார். இருவரின் காதல் எந்த நிலையில் உள்ளது என்றபோது, இருவரும் சிக்கலான நேரங்களை சந்தித்தது உண்மை. ஆனால் அது எங்களை பிரியும் அளவுக்கு கொண்டு செல்லவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் எண்ணம் இல்லை ஆனால் நான் அவருடன் சேர்ந்து வாழ்வதை யாரும் தடுக்க முடியாது என பேட்டியளித்துள்ளார்.

இருவரும் இப்போது சேர்ந்து வாழ்ந்து வருவதாக மல்லுவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: , ,

Leave a Reply