மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை பயணத்தின் போது, அங்குவாழும் தமிழர்களின் பாதுகாப்பு, உரிமை வளர்ச்சி திட்டங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் பேச்சு நடத்தி உள்ளார்.
வரும் மாதங்களில் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதுபற்றி தமிழக மக்களின் எண்ணம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
















