பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அப்பதவியிலிருந்து விலக மாட்டார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் அவர் ஒரு தலைபட்சமாக செயற்படுவதாக கனடா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.
கனடாவின் குற்றசாட்டை அடுத்து அவர் செயலாளர் பதவியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கமலேஷ் சர்மாவிற்கு அப்பதவியிலிருந்து விலகும் நோக்கமெதுவும் இல்லையென அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பார் எனவும் அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
















