கனேடிய ராஜதந்திரிகளை அழைத்து விளக்கம் கோரும் உத்தேசம் தற்போதைக்கு கிடையாது வெளிவிவகார அமைச்சு

srilanka-logoகனேடிய ராஜதந்திரிகளை அழைத்து விளக்கம் கோரும் உத்தேசம் எதுவும் தற்போதைக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கனேடிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை தொடர்பில் வெளிளிட்ட கருத்துக்கள் குறித்து இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட ராஜதந்திரிகளிடம் விளக்கம் கோரப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போதைக்கு அவ்வாறான எவ்வித உத்தேசமும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்படும் என கெஹலிய தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply