தியாகு உயிரைக் காப்போம்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

thiyagu-demoஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும், இலங்கை பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி உரையாற்றினார்.

இதேபோல் தஞ்சை, சிதம்பரம், பெண்ணாடம், மதுரை, ஓசூர் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

Tags: , , ,

Leave a Reply