இனி ரஜினி பட தலைப்பே வேண்டாம்: கார்த்தி தீர்மானம்

karthiஅட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு காளி என பெயர் வைப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்படத்தின் தொடக்க விழாவின்போது தலைப்பு வைக்காமல் படப்படிப்பு தொடங்கப்பட்டது. காளி பட தலைப்பு வைக்காமல் இயக்குனர் பின்வாங்கியது ஏன்? என்று விசாரித்தபோது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

காளி என்பது கடவுள் பெயர். சரஸ்வதி சபதம், திருவிளையாடல் என சில பக்தி பட தலைப்புகளை வைத்தபோது எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல் இதற்கும் எதிர்ப்பு கிளம்பிவிடக்கூடாது என்று எண்ணினர். அது மட்டுமே காரணம் கிடையாது. இன்னொரு காரணமும் உள்ளது.

ரஜினி நடித்த நான் மகான் அல்ல என்ற தலைப்பை தன் பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்திருக்கிறார். மூன்றுமுகம் படத்தில் ரஜினியின் அதிரடி பொலிஸ் கேரக்டரான அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரையும் தனது பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்தார்.

மீண்டும் ரஜினி சம்பந்தப்பட்ட பட தலைப்பை வைத்தால் அவரையே ரிப்பீட் செய்வதுபோல் இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே பட தலைப்பை மாற்ற கார்த்தியும் இயக்குனரும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

Tags: , ,

Leave a Reply