அரியாலையில் கார் மீது மோதியது ரயில்! – 2 பேர் பலி.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    
விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!