தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

cv-vigneswaranதமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத பேதங்களை களைந்து மக்கள் மக்களாக வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களுடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடவுள் மீது நம்பிக்கைக் கொண்ட அனைவரும் ஏனையவர்களுடன் சகாவழ்வுடன் வாழ்வார்கள் எனத் தெரிவி;த்துள்ளார்.

வடக்கில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply