சிம்புவுடன் இணையும் ஆண்ட்ரியா

simbu-andriyaநடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மின், வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் ´இங்க என்ன சொல்லுது´ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகின்றது. இதில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.

இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்துள்ளார். சிம்புவின் காதலியாக அவர் இதில் தோன்றுகிறார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது போன்ற நகரத்துக் காட்சிகள் சில இதுவரை படமாக்கப்பட்டுள்ளன.

சிறப்புத் தோற்றமாக இல்லாமல் ஆண்ட்ரியாவும் இதில் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றார். தன்னுடன் இதுவரை நடித்திராத அதேசமயம் திறமையான நடிகை ஒருவரை இந்தவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினார்.

இந்த ஜோடி திரையில் புதுமையாகவும் அதேசமயம் நல்ல நடிப்புத் திறமையுடன் இணைந்தும் திரையில் தோன்றுகின்றனர் என்று கணேஷ் கூறினார்.

Tags: , ,

Leave a Reply