வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

vikneswaran5வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். துரதிஷ்­ட­வ­ச­மாக நாம் கிழக்கு மாகாண சபையை இழந்­துள்ளோம். தற்­பொ­ழுது கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் மக் கள் அதன் தாக்­கத்தை உணர்ந்­துள்­ளனர். எனவே இனி­வரும் காலங்­க­ளி­லா­வது நாம் அனை­வரும் ஒற்­று­மை­யுடன் செய­லாற்ற வேண்டும் என வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள மஸ்ஜித் முஹாம்­தி­யாவில் நடை­பெற்ற முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் வட­மா­காண முத­ல­மைச்சர் உரை­யாற்­று­கையில்,

தந்தை செல்வா காலத்­தி­லி­ருந்து தலைவர் சம்­பந்தன் வரை­யுள்ள காலத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்­காக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் குரல் கொடுக்கத் தயங்­கி­ய­போது தமிழ்த் தலை­வர்­களே குரல் கொடுத்து வந்­துள்­ளனர்.

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யில்­கூட இன்று முஸ்லிம் மக்­களின் உரிமைப் பிரச்­சி­னைகள் பேசப்­பட்­டுள்­ளன. தற்­பொ­ழுது வட­மா­காண சபையில் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களைக் கண்­ட­றிந்து அதற்­கான தீர்வைக் காண்­ப­தற்­காக அஸ்மின் ஐயூப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அங்­கத்­த­வர்கள் அனை­வரும் அமைச்சின் பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்கு உத­வி­யா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

அதேபோல் முஸ்லிம் விவ­கா­ரங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய பொறுப்பை முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்குக் கொடுத்­துள்ளோம். இறை­நம்­பிக்கை மனி­தா­பி­மா­னத்­துடன் மதத்தின் அடிப்­ப­டையில் இன்று இரு இனங்­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது என்றார்.

இதே­வேளை முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன், கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், மாவை சேனா­தி­ராசா ஆகியோர் யாழ்.குடா­நாட்­டி­லுள்ள பாசையூர் புனித அந்­தோ­னியார் தேவா­லயம், தெல்­லிப்­பழை துர்க்கை அம்மன் ஆலயம், குப்பிளான் சிவபூமி ஆச்சிரமம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன், சோ.சுகிர்தன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , , , , ,

Leave a Reply