திரு­ம­ண­மாகி ஒரு மணி நேரத்தில் மண­ம­க­ளுக்கு மொட்­டை­ய­டித்த மண­மகன்

mottaiதிரு­ம­ண­மாகி ஒரு மணி நேரத்தின் பின்னர் கண வன் தனது தலை முடியை ஷேவ் செய்ய அனு­ம­தித்து விருந்­தி­னர்­களை அதிர்ச்­சி­ய­டையச் செய்த சம்­ப­வ­மொன்று அண்­மையில் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ரொக்ஸி க்ரிவ்ஸ் (31 வயது) – மைக் (30) ஜோடியே இவ்­வாறு திரு­மண நாளில் தலை முடியை சேவ் செய்­துள்­ளனர்.

யோர்­க்ஷ­யரைச் சேர்ந்த இந்த ஜோடி புற்­றுநோய் ஆராய்ச்சி அறக்­கட்­டளை ஒன்­றுக்கு நிதி சேக­ரிக்­கவும் புற்­றுநோய் விழிப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­தவே திரு­மண நாளில் மண­ம­க­ளுக்கு மொட்டை போட திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இது குறித்து 2 குழந்­தை­க­ளுக்கு தாயான ரொக்ஸி கூறு­கையில், எனது 16ஆவது வய­தி­லி­ருந்தே புற்­று நோய் ஆராய்ச்­சிக்­காக மொட்டை போட நினைத்­தி­ருந்தேன். ஆனால் அது­வொரு முக்­கி­ய­மான நாளாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

இதனை எனது திரு­மண நாளில் செய்ய மைக்­கிடம் கேட்­டுக்­கொண்டேன் எனத் தெரி­வித்­துள்ளார்.

புற்­று­நோ­யினால் இவர்­க­ளது சொந்­தங்கள் இறந்­ததன் பின்னர் இந்த ஜோடி அறப்­ப­ணிக்கு உத­வி­செய்து வரு­கின்­றது. இதற்­காக www.justgiving.com எனும் இணை­யத்­த­ளத்­தினை ஆரம்­பித்து பிரித்­தா­னிய புற்­றுநோய் ஆராய்ச்­சிக்­காக 1300 பவுண்கள் நிதி சேக­ரித்­துள்­ளனர்.

இருப்­பினும் திரு­மண நாளில் மொட்டை சம்­ப­வத்தால் வைப­வத்தில் கலந்­து­கொண்ட பலரும் அதிச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

Tags: , ,

Leave a Reply