உணவுப்பொதி வாங்கச் சென்ற பெண்ணின் கீழாடைக்குள் கைத்தொலைபேசியில் படம் பிடித்த நபர் கைது

cellphone-policeபெண் ஒருவரின் கீழாடையை தனது கையடக்கத் தொலைபேசியில் படமாக்கிய நபரொருவரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

ஹோமாகம பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் உணவுப் பொதியொன்றை கொள்வனவு செய்ய பெண்ணொருவர் உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த உணவகத்தில் படியொன்றின் மேல் ஏறியே உணவினை கொள்வனவு செய்ய வேண்டியிருந்த நிலையில் அவர் அதன் மேல் நின்று உணவுப் பொதியினை கொள்வனவு செய்துள்ளார்.

இதன்போது தனது ஆடையின் கீழ்பகுதியை ஏதோ இழுப்பது போன்று உணர்ந்துள்ள அப்பெண் திரும்பி கீழ்நோக்கி பார்த்துள்ளார்.

இதன்போது கையடக்கத் தொலைபேசியொன்று தனது கீழ் பாகத்தை படமாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ள அப்பெண் அதனை அவ்வுணவகத்தின் ஊழியர் ஒருவர் செய்து கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கூக்குரலைக் கேட்டு பாதையில் நின்ற பொலிஸார் ஓடிவர சந்தேக நபர் வசமாக சிக்கியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், குறித்த கையடக்கத் தொலைபேசியை மீட்டதுடன் அதில் குறித்த பெண்ணின் கீழாடை படமாக்கப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இரு பிள்ளைகளின் தாயார் என ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tags: , , ,

Leave a Reply