ஹலாலுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டம்; பொதுபல சேனா

pothu-pala-senaஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை எனவே நாம் மீண்டும் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹலால் பிரச்சினைக்கு முடிவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

எனவே நாம் போராட்டங்கள் மூலம் பெற முயற்சிக்கின்றோம் .அதன்படி கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்திலிருந்து கண்டி சிறிதலாதா மாளிகை வரையில் பாத யாத்திரையொன்று நடத்தப்பட உள்ளதுடன் அங்கு அதிஸ்டான பூஜையொன்று நடத்தப்பட உள்ளது.

ஹலால் சான்றிதழ் குறித்த பிரச்சினைக்கு எவரது மனதும் வலிக்காத வகையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் இதனால் பௌத்த மக்களின் மனங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

ஹலால் பண்டங்கள் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன .எனவே இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply