ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அப்பாவி என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை சம்பவத்தில் மங்கள சமரவீரவை சிக்க வைக்க அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றில் குற்றவாளிகளாக பட்டியலிடப்பட்டவர்களை அரசாங்கம் மாற்றியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த கைதுகள் ஓர் அரசியல் சூழ்ச்சித் திட்டமாகவே கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மங்கள சமரவீர ஓர் அரசியல் கைதியாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமையில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடாத்துவது நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கும் நிலையில் இந்த அமர்வுகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறை, தேர்தல், பொதுத்துறை, நீதிமன்றம் போன்றவற்றில் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டியது அவசியமானது என ரணில் விக்ரமசிங்கத் தெரிவித்துள்ளார்.
















