பஞ்ச்டயலாக் டாடா சொல்கிறார் விஜய்

vijay5பஞ்ச் வசனங்களுக்கு அஜீத்தை தொடர்ந்து விஜய்யும் டாடா சொல்கிறார்.ரஜினியின் படங்களில் பஞ்ச் வசனங்கள் பிரபலம். அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் மட்டுமின்றி, வளரும் மற்றும் வளராத ஹீரோக்கள் கூட பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தனர். இது ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. இதையடுத¢து தனது படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்ச் பேசுவதை குறைத்த ரஜினி, இப்போது அதை விட்டுவிட்டார்.

அதேபோல் தனது படத்தில் பஞ்ச் வசனமே இருக்கக்கூடாது என இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டார் அஜீத். இந்த பாணியை விஜய்யும் கடைபிடிக்க தொடங்கியுள்ளார். அவர் கடைசியாக நடித்த தலைவா படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இல்லை. அடுத்து அவர் நடித்து வெளியாக உள்ள ஜில்லா படத்திலும் அதுபோன்ற எந்த டயலாகும் கிடையாதாம். அதேபோல் இனி தனது படங்களில் ஹீரோயிச ஓவர் பில்டப் காட்சிகளுக்கும் விஜய் தடை போட்டிருக்கிறாராம்.

Tags: , ,

Leave a Reply