ஜெய்யுடன் நடிக்கும்போது ஏதேதோ எண்ணம் வருது: சிலிர்க்கிறார் ஸ்வாதி

jai-swathiமீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேருவது பழைய நினைவுகளை தூண்டுகிறது என்றார் ஸ்வாதி. சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய், ஸ்வாதி ஜோடியாக நடித்தனர். இப்படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு இந்த ஜோடி இப்போது மீண்டும் வடகறி படத்தில் இணைகிறது.

இது பற்றி ஸ்வாதி கூறும்போது, சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு வடகறி படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறோம். இது பல எண்ணங்களை மலரச்செய்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தபோது கிடைத்த நல்ல அனுபவங்கள் என் கண்முன் வந்து செல்கிறது. அடுத்து அமளி துமளி படத்தில் நடிக்கிறேன்.

இதற்கிடையில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் எனக்கு தமிழில் புதிய வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதுதவிர மலையாளத்தில் ஆமென், நார்த் 24 கதம் போன்ற படங்களில் நடிக்கிறேன். மனதுக்கு பிடித்த சில கமர்ஷியல் படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Tags: , ,

Leave a Reply