பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை

Tamil-news-Sri-Lanka-Flagபட்­டி­னியில் ஆபத்­தான நிலையில் இலங்கை உள்­ள­தாக ௨௦­௧௩ பட்­டினி சுட்­டியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், இந்­தியா 2012 ஆம் ஆண்டு உலக பட்­டினிச் சுட்­டியில் 67 ஆம் இடத்­தி­லி­ருந்து 2013 ஆம் ஆண்டு 63 ஆம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. எனினும் ஐந்து வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களில் 40 வீத­மானோர் ஆபத்­தான நிலையில் இருப்­ப­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை. சீனா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய நாடு­க­ளுக்கு கீழேயே இந்­தியா உள்­ளது.

உலக பட்­டினி சுட்­டியில் சீனா, பட்­டினி மட்­டத்தில் 6 ஆம் இடத்தில் உள்­ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57ஆவது,பங்­க­ளாதேஷ் 58 ஆவது இடங்­களை பெற்று கடு­மை­யான பட்­டினி மட்­டத்­தி­லி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இந்த சுட்டி 120 அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களின் பட்­டினி மட்­டத்தை காட்­டு­கின்­றது. இந்த சுட்­டியை தயா­ரிக்கும் போது மந்த போஷனை உடை­யோரின் விகி­தா­சாரம்இ ஐந்து வய­துக்கு குறைந்த பிள்­ளை­களில் நிறை குறைந்த பிள்­ளை­களின் விகி­தா­சாரம், ஐந்து வய­துக்கு குறைந்த பிள்­ளை­களின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்­கப்­பட்­டன.

இது­வரை வெளி­யி­டப்­பட்ட பட்டினிச் சுட்டி அறிக்கையின்படிஇ 19 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply