அமெ­ரிக்க கடன் வரை­யறை தொடர்பில் இணக்­கப்­பாட்டை நெருங்கும் செனட்­சபை

usa-flag2அமெ­ரிக்க செனட் சபை உறுப்­பி­னர்கள் அந்­நாட்டு கடன் வரை­ய­றையை அதி­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கை­யொன்றை நெருங்கி வந்­துள்­ள­தாக அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

வரவு -செல­வுத்­ திட்­ட­மொன்­றுக்கு அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் இணக்கம் காணத் ­த­வ­றி­ய­தை­ய­டுத்து, அந்­நாட்டின் அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டன.

மேற்­படி நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டுள்ள நிலையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்­கத்தின் கடன் வரை­ய­றை­களை அதி­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கை­யொன்றை குடி­ய­ரசுக் கட்­சி­யினர் நெருங்கி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

மேற்­படி சட்­ட­மூ­ல­மா­னது அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் சபையின் அங்­கீ­கா­ரத்தை பெற வேண்­டி­யுள்ள நிலையில், அந்த சபை­யி­லுள்ள குடி­ய­ரசுக் கட்சி உறுப்­பி­னர்கள் இது தொடர்பில் எது­வித இணக்­கப்­பாட்­டையும் இதுவரை எட்­ட­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­கா­வா­னது தனது 16.7 திரில்­லியன் டொலர் கடன் வரை­ய­றையை வியா­ழக்­கி­ழ­மைக்குள் அதி­க­ரிக்க வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில், மேற்படி நிதி நெருக்கடி யானது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சீர்கேட்டை விளைவிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply