மனித உரிமை முன்னேற்றம் குறித்து பிரித்தானியா இலங்கையை வலியுறுத்தும்

uk-johnஇலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் கடும் செய்தியுடன் இலங்கை வருவார் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ராங்கின் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை விடயங்கள் குறித்து சமரசம், அரசியல் தீர்வு, குறித்த உறுதியான முன்னேற்றம் செய்ய வேண்டும் போன்ற தெளிவான செய்தியை பிரித்தானிய பிரதமர் வெளியிடுவார் என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply