உயிரோடு இருப்பவரை சாகடித்து தேர்தல் திணைக்களம் “சாதனை”

elections_secretariatவவுனியா மாவட்டத்தில் உயிருடன் உள்ள ஒரு வருக்கு “இறப்பெய்தியவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து, வடமாகாண சபைத் தேர்தலின் போது வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல், வியாசர் வீதி, 11 “ஏ’ என்ற முகவரியைச் சேர்ந்த ஸ்ரீதர் குமாரவேலு இராசையா என்பவருக்கே இவ்வாறு “இறப்பெய்தியவர் என அறவிக்கப்பட்டுள்ளது” என்று வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் உயிருடன் இன்னமும் உள்ள நிலையிலேயே இத்தகைய வாக்காளர்அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் வடமாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்ட தாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வவுனிய மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பொ.குகநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது:

“இறப்பெய்தியவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது’ அல்லது வெளிநாடு சென்றுள்ளார் என்று பதியப்பட்டவாறு வாக்காளர் அட்டை கிடைத்தால் அதைக் கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர் வாக்களிக்க முடியும்.

ஒரு சில கிராம சேவையாளர்கள் தனிப்பட்ட பழி வாங்கல்களுக்காகவோ கடமை அலட்சியம் காரணமாகவோ, தான் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரான வர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குகின்றனர்.

கிராம சேவையாளர்கள் வழங்கும் தகவல்களை வைத்தே தேர்தல் திணைக்களம் வாக்காளர் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக என்னிடம் முறைப்பாடு செய்தால் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி குறித்த கிராம சேவையாளர், பிரதேச செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ளமுடியும்.

அல்லது குறித்த நபர் தனது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்தால், அந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

Tags: , , ,

Leave a Reply