இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நாளை மறுதினம் சனிக்கிழமை ஏற்படுகின்றது.
அதிகாலை 3.21 க்கு ஆரம்பித்து காலை 7.20 க்கு முடிவடையும் என்று கொழும்பு பல்கலைக் கழகத்தின் பெளதிகவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதனால் இச் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.
வளிமண்டலத்தின் மேற்கு மையத்தில் சந்திரன் நிலைகொண்டிருக்கும் போதே இது இடம்பெறும். அன்று அதிகாலை 5.57 க்கு சந்திரன் அஸ்தமிக்கும். இந்த சந்திரகிரகணத்தை அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
பூமியின் கருமையான பகுதி நிழல் சந்திரன் மீது விழாத போதிலும் கருமை குறைந்த நிழல் சந்திரன் மீது விழும் போதே இச் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதனால் சந்திரனின் வெளிச்சம் ஓரளவு இக்கிரகணத்தின் போது மங்கிவிடும். இத்தகைய சந்திரகிரகணங்களை அதன் ஆரம்பத்திலும் முடிவிலும் அவதானிப்பது மிகவும் கடினம்.
















